நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

செவ்வாய், மே 29, 2012

ஷியாக்கள் ஓர் ஆய்வு (பாகம் 2)


ஷியாக்கள் ஓர் ஆய்வு- 2

ஷியாக்களின் கடவுள் கொள்கை

அபூஉஸாமா
அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பி வரும் படு பயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)
இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.
கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.
இந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப் பட்ட (?) இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.
"மதுவைத் தடை செய்வதற் காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில்  இடம் பெற்றுள்ளது.
இதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.
அபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். "அபூஜஃபர்,  (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூ ஜஃபர் இறந்த பின்னர் அபூ முஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், "அபூ ஹாஷிமே! மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன்  இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே! இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது'' என்று அபுல் ஹஸன் கூறினார்    என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.
இது ஷியாக்களின் "அல்ஹுஜ்ஜத்' என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.
தனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார். "என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை'' என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.
(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார்? எப்படிப்பட்ட சிறப்புள்ளவர்? என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)
இவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
நாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.
"இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்''
இது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.
ஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.
"என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 20:52
அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 59:22
அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன. அல்குர்ஆன் 65:12
இந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.
இதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.
இதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.
இது எவ்வளவு பெரிய இறை மறுப்பு! இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும்? இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை? தெளிவாக யூதர்களின் வேலை தான்.
"அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்'' எனவும் கூறுவோம். அல்குர்ஆன் 3:182
அல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.
"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். அல்குர்ஆன் 5:64
அல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல! யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.
அப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.
(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)
பாருங்கள்! அப்துல் முத்தலிப் யார்? இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர்! அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. அல்குர்ஆன் 16:120
ஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப் போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல்முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.
மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்பப்படும் போது முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (பார்க்க: புகாரி 3349)
இந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை!
இப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூத வாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்?

தொடரும்...
நன்றி: ஆன்லைன் பீ.ஜெ

திங்கள், மே 28, 2012

ஷியாக்கள் ஓர் ஆய்வு (பாகம் 1)


ஷியாக்கள் ஓர் ஆய்வு -1

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும்

அபூஉஸாமா

 யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம்

"ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி', "ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி' என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின.
அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என்பதை தவ்ஹீது ஜமாஅத் தனது ஏடுகளில் இனம் காட்டியது.
இன்றளவும் ஈரானை இஸ்லாமிய நாடு என்றும் ஷியாக்களின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் பறை சாற்றுபவர்கள் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிரான பரேலவிஸ ஆலிம்களுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு தங்கள்  குருட்டுத் தனத்தில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அரபகத்தில் யூதர்களுக்கும், ஷியாக்களுக்கும் எதிராகத் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டவரும், இஸ்லாத்தின் இந்த இரண்டு எதிரிகளுக்கு எதிராக அரபகத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டவருமான இராக் அதிபர் சதாம் ஹுசைனை படுகொலை செய்ய ஏகாதிபத்திய அமெரிக்கா எண்ணிய போது அந்தக் காரியத்தை ஷியாக்கள் ஏற்று கச்சிதமாகச் செய்து முடித்தனர்.
இந்தக் கோழைத்தனமான கொடுஞ்செயலை உலகம் முழுவதும் ஒன்று திரண்டு எதிர்த்த போது இராக்கில் உள்ள ஷியாக்கள் மட்டுமல்ல! உலகெங்கிலும் உள்ள ஷியாக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இந்தியாவிலும் "சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் தான்'' என்று அனைத்திந்திய ஷியா சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் கல்பி சித்தீக் என்பவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் (தமிழகத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அல்ல) முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் உள்ள பகையை ஷியாக்கள் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டனர்.
இங்கு ஷியாக்கள் தங்களை யார் என்று அப்பட்டமாக அடையாளப் படுத்திக் கொண்டனர். தங்கள் குரோதத்தையும், கோர முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோர் மீது இந்த ஷியாக்கள் கொண்டிருக்கும் பகைமையை, அதன் ஆழத்தை இன்னும் தெளிவாக வரலாற்று ரீதியாக இந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கி, ஈரானிய மற்றும் ஏனைய ஷியாக்கள் இஸ்லாமியர்களா? அல்லது யூதர்களா? என்பதைப் படம் பிடித்துக் காட்டுவது நமது கடமையாகும்.
இதன் மூலம் ஈரான் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று வர்ணித்து மக்களை நரகப் பாதைக்கு வளைத்துப் போடும் அநியாயத்திலிருந்து காக்க முடியும். அத்துடன் இங்குள்ள சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் எப்படி ஷியாக்களின் மறு பதிப்பாக உள்ளனர் என்பதையும் அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகின்றது. அதற்காகவே இந்தக் கட்டுரை!
ஏகத்துவத்தின் இந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வாக்கங்கள், ஆதார வளங்கள் அனைத்தும் ஷியாக்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அறிஞர் இஹ்ஸான் இலாஹி லஹீரியின் "ஷியாவும் சுன்னத்தும்'' என்ற நூலிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ஈரானில் ஏனிந்த வேர் பிடிப்பு

ஷியாயிஸத்தின் பிறப்பிடமாக மட்டுமில்லாமல் வளர்ப்பிடமாகவும் ஈரான் இருப்பதற்குக் காரணம் என்ன?
ஈரான் என்ற பாரசீகப் பேரரசின் சாம்ராஜ்யம் தாக்கப்பட்டதும், தகர்க்கப்பட்டதும் அன்றைய இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது ஆட்சித் தலைவராக இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வீரமிக்க கைகளால் தான். இதனால் பாரசீக சக்திகள், பாசி படிந்த உயர் சாதியினர் உமர் (ரலி) அவர்களைப் பழி வாங்கத் துடித்தனர்.
பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த பாரசீகர்கள் பதவிப் பித்தை விட்டு வெளியேறுவது சாதாரண விஷயமல்ல! அதனால் அவர்கள் பழி வாங்கத் துடிப்பது இயல்பு தான். எனவே இவர்களுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒத்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் கை கோர்த்தனர். அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு எதிராக இவ்விரு தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து களம் அமைத்தனர்.

கைதியான அரசிக்குக் கணவரான ஹுசைன் (ரலி)

இப்படி இவர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில் பாரசீகத்திலிருந்து கைதியாக வந்த ஷஹ்ர் பானு என்ற பெண்ணை ஹுசைன் (ரலி) அவர்கள் மணமுடிக்கின்றார்கள். இந்தப் பெண் பாரசீக மன்னர் யஸ்தஜ்ரித் என்பவரின் மகளாவார். இந்நிகழ்வு யதார்த்தமாக நடந்த நிகழ்வாகும்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு, யூதர்களின் முழு ஒத்துழைப்புடன் பாரசீகர்கள் இஸ்லாமிய அரசுக்குள் குழப்பம் விளைவிப்பதற்கு விரிவான முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.
உமர் (ரலி) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் புனிதமேற்றும் பூர்வாங்கப் பணியில் இறங்கினர். அலீ (ரலி) அவர்களுக்கு விலாயத் இருப்பதாக வாதிட்டனர். அலீ (ரலி) அவர்களின் கவனத்திற்கு வராமலேயே இந்தச் சதி வலையைப் பின்னினர்.
பாரசீகர்கள் ஏற்கனவே தங்களை தெய்வீக வழித் தோன்றல்கள் என்றும் தங்களின் நரம்பு நாளங்களில் தெய்வீக ரத்தம் ஓடுவதாகவும் நம்பியவர்கள்.
சாசானியர்களான அவர்களிலிருந்து ஷஹ்ர் பானு என்ற பெண் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சம்சாரமாகி விட்ட பின்னர், அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதற்குரிய வழி மிகவும் எளிதானது; இலகுவானது.
பாரசீகர்களைச் சேர்ந்த இந்த மனைவியின் மூலமாக ஹுசைன் (ரலி) அவர்களுக்குப் பிறந்தவர் தான் ஜைனுல் ஆபிதீன் என்ற சின்ன அலீ ஆவார். இவருடைய பூத உடலில் ஓடுவது சாதாரண மனித இரத்தமல்ல! புனித இரத்தம் என்று ஒரு புனித வரலாற்றை உருவாக்கினர்.
இதனால் தான் ஈரானில் பெரும்பான்மையானவர்கள் ஷியாயிஸத்தில் நுழைந்தனர். இது தான் ஈரான் ஷியாக்களின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருப்பதற்குக் காரணமாகும்.
இப்போது ஷியாயிஸம் உருவான வரலாற்றைப் பார்ப்போம்.

ஷியாயிஸம் உதயமான வரலாறு

முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற துல்லியமான வெளிச்சம் பூமியெங்கும் பரவத் தொடங்கியதும் புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதத் தொடங்கியதும் இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள், குறிப்பாக அரபிய தீபகற்பத்தில் இருந்த யூதர்கள், ஈரானில் உள்ள நெருப்பு வணங்கிகள் ஆகியோரின் உள்ளங்கள் கரியத் தொடங்கின.
இதனால் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளில் அவர்கள் இறங்கினர்; சூழ்ச்சிகளைச் சுற்றிலும் பின்னினர். ஆனால் அல்லாஹ்வின் ஒளி இத்தனையையும் தாண்டி, சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன். (அல்குர்ஆன் 61:8)

அப்துல்லாஹ் பின் ஸபா

இஸ்லாம் உதயமானதும் முதன் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தில் இஸ்லாத்தின் பெயராலேயே யூதக் கருத்தைப் புகுத்தியவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவன் தான்.
இவன் ஒரு யூதன்! இவனுடைய மூதாதையர்களான பனூ குரைளா, பனூ நுளைர், பனூ கயன்காஃ ஆகிய கோத்திரத்தார் இஸ்லாத்தை, அதன் இறைத் தூதரை எதிர்த்துப் படை நடத்தினர். இவர்கள் நடத்திய போர்கள் அனைத்திலும் அடுக்கடுக்காகத் தோல்வியைத் தான் சந்தித்தனர். இதனால் முஸ்லிம்களை அவர்கள் நேருக்கு நேர் களத்தில் சந்திக்கும் காரியத்தைக் கைவிட்டனர்.
ஆனால் திரை மறைவில், முதுகுக்குப் பின்னால் நின்று குரல் வளையை அறுக்கும் கலையைக் கையில் எடுத்தனர்.
இதன்படி யமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸபாவும் அவனது சதிகார சகாக்களும் ஒரு திட்டம் தீட்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்தவரும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களில் மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் தலைநகர் மதீனாவிற்குள் அந்தத் திட்டத்தை அரங்கேற்றினர்.
தங்கள் காரியத்தை அரங்கேற்றுவதற்கு அலீ (ரலி) அவர்களைக் கவசமாக்கிக் கொண்டு மதீனாவில் குளறுபடிகளையும், குழப்பத்தையும் தோற்றுவித்தனர். மக்களின் மனங்களில் விஷக் கருத்துக்களைத் தூவினார்கள்.
தபூக் போர் நடந்த காலம் மிகவும் கஷ்டமான காலமாகும். "இந்த இக்கட்டான காலத்தில் உதவுபவர் யார்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஆயிரம் தீனார்களைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் அர்ப்பணித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நாளுக்குப் பின்னர் (உஸ்மான்) இப்னு அஃப்பான் செய்யும் (பாவமான) காரியம் அவரைப் பாதிக்கச் செய்யாது'' என்று பல தடவை கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸமுரா(ரலி) நூல்: அஹ்மத் 19713, திர்மிதீ 3632
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைப் பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்குச் சுவனத்தையும், வீர மரணத்தையும் கொண்டு சுபச் செய்தி கூறினார்கள்.
இப்படிப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் மீது முஸ்லிம்களைத் தூண்டி விட்டவர்கள் அப்துல்லாஹ் பின் ஸபாவும், அவனது யூத சகாக்களும் தான்.

யூத இனத்தின் வெற்றி

இவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான, இஸ்லாத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத கொள்கைகளை முஸ்லிம்களிடம் பரப்பினர்.
தூய இஸ்லாத்திற்குத் துரோகம் இழைத்த இந்தக் கூட்டம் தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் தான் ஷியா ஆகும்.
அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டனர். (ஆனால் அலீ (ரலி) அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை) ஷியா என்றால் சமுதாயத்தினர், சாரார் என்று பொருள். இவர்கள் தான் முஸ்லிம்களை ஒருவரை மற்றொருவருக்கு எதிராக மூட்டி விட்டனர்; ஒருவரை மற்றவருடன் மோத விட்டனர்.
இந்த வகையில் யூதம் வெற்றி கண்டு விட்டது. பாரசீகம் முஸ்லிம்களைத் தோற்கடித்து விட்டது. யூதர்கள் தயாரித்து அனுப்பிய அப்துல்லாஹ் பின் ஸபா அரிய பலனைக் கொடுத்தான்.
யூதர்களிடத்தில் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்றிருந்த அவன், ஷியாக்களிடமும் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்று விடுகின்றான். இந்த அடிப்படையில் தான் ஷியாவின் வேர்கள் யூத மதத்தில் ஆழப் பதிந்தவை என்று கூறுகின்றோம்.

அப்துல்லாஹ் பின் ஸபாவைப் பற்றி அறிஞர்கள்

"குர்ஆன் ஒன்பது பாகங்களில் ஒரு பாகமாகும். அதன் ஞானம் அலீயிடம் உள்ளது என்று இவன் நம்பிக்கை கொண்டிருந்தான். இதை அலீ (ரலி) உறுதியாக மறுத்து விட்டார்கள்'' என்று இமாம் ஜவ்ஸஜானி கூறுகின்றார்.
"இவனது ஊர் யமன் ஆகும். இவன் யூதனாக இருந்து பின்னர் தன்னை முஸ்லிம் என்று பிரகடனம் செய்து கொண்டான். தலைவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்படாமல் தடுப்பதற்காக அவர்கள் வாழும் ஊர்களைச் சுற்றி வந்து அவர்களிடம் இந்தத் தீமைகளைப் புகுத்தினான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தீய நோக்கத்தில் திமிஷ்க் என்ற ஊருக்குள் நுழைந்தான்'' என்று இப்னு அஸாகிர் தமது தாரீக் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
"அப்துல்லாஹ் பின் ஸபாவின் விவகாரங்கள் வரலாற்று நூல்களில் பிரபலமானவையே! அவன் எந்த ஹதீஸையும் இதுவரை அறிவிக்கவில்லை. இதற்குரிய புகழ் அல்லாஹ்வுக்கே! ஸபாயிய்யா என்று அழைக்கப்படும் இவனது ஆதரவாளர்கள் அலீ (ரலி) அவர்களைக் கடவுளாகக் கருதினார்கள். இவர்களை அலீ (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நெருப்பினால் கொளுத்தினார்கள்'' இவ்வாறு ஹாபிழ் இப்னு ஹஜர் தன்னுடைய லிஸானுல் மீஸானில் தெரிவிக்கின்றார்கள்.
இந்த மேற்கோள்கள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துக்களாகும். இது லிஸானுல் மீஸான் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
"அப்துல்லாஹ் பின் ஸபா யூதத்திலும், இஸ்லாத்திலும் விலாயத் என்ற கொள்கையை கொண்டிருந்தான்; அலீயை கடவுளாகக் கொண்டிருந்தான்'' என்ற கருத்தை இந்த அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்துல்லாஹ் பின் ஸபா இந்தக் கொள்கையை உடையவன் தான் என்பதை ஷியா இமாம்களும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அவனது கொள்கையைச் சரி காண்கின்றனர்.
இவனைப் பற்றி ஷியா இமாம் கஷிய்யி என்பவர் கூறுவதைப் பாருங்கள்.
"அப்துல்லாஹ் பின் ஸபா யூதனாக இருந்து இஸ்லாத்தைத் தழுவினான். அலீயை வலியாக எடுத்துக் கொண்டான். அவன் யூதத்தில் இருக்கும் போது, மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் தோன்றிய யூஷஃ பின் நூனுக்கு இதே விலாயத்தைக் கற்பித்தான். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு இதே விலாயத்தைக் கற்பித்தான்'' என்று அறிஞர்களில் ஒருவர் கூறுகின்றார்.
இவ்வாறு ஷியா இமாம் கஷிய்யி தனது "பிரசித்தி பெற்ற வாழ்க்கைக் குறிப்புகள்'' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
ஷியா இமாம்களில் ஒருவரான நவ்பக்ஸியும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்.
(ஷியா வசுன்னத், பக்கம்: 17)
இந்தக் கொள்கையைத் தான் ஷியாக்கள் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து ஷியாயிஸத்தின் ஆணி வேர் யூத மதம் தான் என்பது நன்கு தெளிவாகின்றது.
அந்த யூத மதம், ஏகத்துவக் கொள்கையை, அந்தக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் நபித்தோழர்களை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.
ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை, ஏகத்துவத்தைப் பின்பற்றிய நபித்தோழர்களுக்கு எதிரான கருத்துக்களை யூதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியாயிஸம் தனது தாய் மதத்திலிருந்து தன்னகத்தே வடித்து வைத்திருக்கிறது.
அதன் அடிப்படையில் ஷியாயிஸம் எங்கெங்கு புகுந்து இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.
தொடரும்...

நன்றி: ஆன்லைன் பீ.ஜெ


ரியா என்னும் சிறிய இணைவைப்பு


ரியா என்னும் சிறிய இணைவைப்பு

அப்துல் அஜீஸ், சென்னை
தீன்குலப் பெண்மணி
ஒரு மனிதன் செய்கின்ற எந்த  நல்ல அமல்களாக இருந்தாலும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமலும் இதற்காக மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் பிறருடைய பாராட்டுதலையும் புகழையும் எதிர்பார்த்து செய்கின்ற செயலுக்கு தான் அரபியில் ரியா என்று சொல்லப்படுகிறது.
ரியா என்ற பாரதுôரமான பாவத்தின் விபரீதத்தைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ளாததின் காரணத்தால் இந்த எண்ணம் நம்மில் பலரிடத்தில் இருப்பதை காணலாம். எனவே இந்த பாவத்தின் வீபரீதத்தைப்பற்றி நாம் முழமையாக அறிந்துக் கொள்வோம்.
ரியா ஏற்படுவதற்கு காரணம்:
ஒருவன் தன்னுடைய தொழுகை, நோன்பு, தர்மங்கள் ஆகிய நல்ல அமல்களை மக்களுக்கு காட்டுவதற்காக செய்து அதன் மூலம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் முக்கிய காரணியாக திகழ்கிறது. இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் ஒரு உதாரணத்தை  சொல்லி நம்மை எச்சரிக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.(அல்குர்ஆன் 2:264)

ரியாவைப் பற்றி வந்துள்ள எச்சரிக்கைகள்:
ரியா என்பது சிறிய இணைவைப்பு என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்கள் விஷயத்தில அச்சப்படுவதொல்லாம் சிறிய இணைவைப்பைத்தான் என்றார்கள். அப்போது நபிதோழர்கள் அல்லாஹ்வின் துôதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ரியா என்று பதிலளித்தார்கள். (நூல் : அஹ்மத் 22523)
இந்த அளவுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எச்சிரிக்கை செய்த விஷயத்தில் இன்றைக்கு நாம் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். உதரணமாக நம்மில் ஒரு சிலர் நாங்கள் தான் ஆரம்பகாலத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக மிகவும் கஷ்டப்பட்டோம் என்றும் அதே போல் நாங்கள் இல்லை என்றால் இந்த ஊரில் தவ்ஹீத் வளர்ச்சி அடைந்திருக்காது என்றொல்லாம் தங்கள் அர்பபணிப்பவை சொல்லிக் காட்டுவதை பார்க்கிறோம்.
அதே போல் இது மாதிரியான எண்ணங்கள் இன்னும் சில செயல்களை நாம் செய்யும் போது ஏற்படும்.
தஃவா பணிகளை வீரியமாக மாவட்டம், கிளைகள் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாநிலத் தலைமை, அதிக தஃவா செய்யும் மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் புள்ளிகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இதில் தஃவா பணிகளை அதிகம் செய்து மக்களிடம் நற்பணிகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் மிகைத்து நிற்க வேண்டுமே தவிர நாங்கள் அதிக புள்ளிகள் வாங்குகிறோம் என்று மக்களிடம் காட்டவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிகைத்து நின்றுவிடக்கூடாது.
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். திருக்குர்ஆன்(2:265)

ரியாவால்  மறுமையில் ஏற்படும் விபரீதங்கள்:
இறைவனுக்காக நல்ல அமல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் இவ்வுலகில் என்னதான் மிகப்பெரிய காரியங்களை செய்தாலும் மறுமையில் அவர்களுக்கு அணுவளவும் கூலி கிடைக்காது. மாறாக நரக வேதனை தான் கிடைக்கும்.
சுலைமான் பின் யசார்  அவர்கள் கூறியதாவது: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ""அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், ""(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்'' என்று பதிலளிப்பார்.
இறைவன், ""(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ""மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு ""அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், ""(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ""(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) ""அறிஞர்' என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; ""குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ""அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ""நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்'' என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ""(இல்லை) நீ பொய் சொல்கிறாய் ""இவர் ஒரு புரவலர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
நூல் முஸ்லிம்:3865
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட மூவரும் சாதாரன அமல்களைச் செய்யவில்லை  மாறாக இஸ்லாத்தில் மிகப்பெரிய நன்மை பெற்று தரக்கூடடிய அமல்கள் என்று சொல்லப்பட்டவைகள். இப்படிப்பட்ட செயலைச் செய்தவர்களின் செயல் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் அவர்களுடைய எண்ணத்தையே கவனித்து கூலி கொடுக்கிறான்.
அவர்களுடைய எண்ணம் சரியில்லாத காரணத்தால் அவர்களை முகம் குப்புற நரகத்தில் வீசுகிறான்.  இவர்களிடத்தில் இறைவனின்  திருப்தியை பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தததான் இந்த இழிவான நிலைக்கு காரணமாகும்.

அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்காது:
யார் பிறருடைய மன குளர்ச்சிக்காக ஒரு நல்ல அமலை செய்தாரோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் எந்த கூலியும் கிடைக்காது. மாறாக யாருக்காக அந்த அமலை செய்தாரோ அவரிடத்தில் சென்று கூலி வாங்கவேண்டிய நிலைஏற்பட்டு ஒன்றும் கிடைக்காத நிலை ஏற்படும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் தீர்ப்பு வழங்கப்படும் போது) பிறருக்காக அமல்களை செய்தவரை நோக்கி அல்லாஹ் கூறுவான்: யாரிடம் உங்கள் செயல்களை காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் சென்று ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல் அஹ்மத்:22523

மறுமையில் அல்லாஹ் விளம்பரப்படுத்துவான்:
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ""யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். நூல் புகாரி : 6499
யார் விளம்பரத்திற்க்காகவோ முகஸ்துதிக்காகவோ ஒரு நல்ல அமலை இவ்வுலகில் செய்கிறாரோ அவருடைய கெட்ட எண்ணத்தை அல்லாஹ் மறுமையில் அம்பலப் படுத்துவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

மறுமையில் இறைவனுக்கு சஜ்தா செய்ய முடியாது:
எந்த மனிதர்கெல்லாம் தன்னுடைய தொழுகை மற்றும் நல்ல அமல்களை  முகஸ்துதிக்காக செய்கிறானோ அவனால் மறுமையில் அல்லாஹ்வுக்கு சிரவணக்கம்  (சஜ்தா) செய்ய முடியாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில்      இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி).  நூல் புகாரி; 4919
எனவே ரியா என்னும் மிக மோசமான தீய எண்ணம் சாதாரண முஸ்லிம் முதல் மார்க்க அறிஞர்கள் வரை என எல்லரிடத்திலும் ஏற்படக்கூடய ஒன்றாகும். இந்த தீமையில் நாம் விழுந்துவிட்டால் என்னதான் அதிக அளவுக்கு நன்மைகள் செய்தாலும் அதனால் மறுமையில் கூலி கிடைக்காது. என்பதை நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளும் தெளிவாக எச்சரிக்கிறது. எனவே இந்த அறிவுரைகளை நம் மனதில் நிறுத்தி கொண்டு இதை (ரியாவை) விட்டும் அல்லாஹ்விடத்தில் அதிக அதிமாக பாதுகாப்பு தேடக் கூடிய நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்குவானாக

நன்றி: தீன்குலப் பெண்மணி, மே 2012 இதழ்
ஆன்லைன் பீ.ஜெ