நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

சனி, ஜூன் 30, 2012

ஷியாக்கள் ஓர் ஆய்வு (பாகம் 14)


ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 14

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட் டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர் களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத் தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்று பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன.
அது போல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி)யிடம், அலீயைப் பற்றித் தெரிவித்ததாக இந்நூலில் கூறப்படும் கருத்துக்கள், தம்மை விட அலீ உயர்ந்தவர், அலீ கோபப்பட்டால் அல்லாஹ் கோபப்படுவான்; அவர் கோட்டையை உலுக்கினால் அல்லாஹ் வானத்தை உலுக்குவான்; அந்த அளவுக்கு அலீ உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது போல் அமைந்திருக்கின்றன.
இப்படித் தான் இந்த ஷியா ஷைத்தான் அந்தச் செய்திகளில் எழுதி வைத்துள்ளான்.
ஷியாக்களின் வேலையே அலீயை உயர்த்தி, நபிமார்கள், மலக்குமார்கள் அத்தனை பேரையும், நபி (ஸல்) அவர்கள் உட்பட அத்தனை பேரையும் மட்டம் தட்டுவது தான்.
வெளிப்படையில் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களை உயர்த்துவது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் தாக்குவது தான் இவர்களது வேலை.
இது தொடர்பாக நிஃமத்துல்லாஹ் அல்ஜஸாயிரி என்பவன் கூறுவதைக் கேளுங்கள்.
தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஹதீஸ்களின் அடிப்படையில் நம்முடைய நபி தான் மற்ற நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ, தூய்மையான (?) ஷியா இமாம்கள் ஆகியோர் நபிமார்களை விடச் சிறந்தவர்களா என்பதில் தான் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஆனால் ஷியா இமாம்களின் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் நிலவவில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அலீ மற்றும் இமாம்களை விடச் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உலுல் அஸ்ம் என்ற தரத்தில் உள்ள நபிமார்களைத் தவிர மற்ற நபிமார்களை விட இந்த இமாம்கள் சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலுல் அஸ்ம் தரத்திலுள்ள நபிமார்களும் இந்த இமாம்களும் சமமானவர்கள் என்று வேறு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பிந்திய காலத்து அறிஞர்கள் நமது இமாம்கள், உலுல் அஸ்ம் நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்ற கருத்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் சரியான கருத்தாகும்.
நூல்: ஜஸாயிர் எழுதிய அல் அன்வாருன் நுஃமானியா, பக்கம்: 128
நிஃமத்துல்லாஹ் (லஃனத்துல்லாஹ்) ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விடத் தங்கள் இமாம்கள் சிறந்தவர்கள் என்று கூறத் துணிந்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்து அவர்களுக்குக் கண்ணியம் சேர்த்திருக்கிறான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல! இந்த விதிவிலக்கை அவன் வேண்டா வெறுப்பாகவே கொடுத்திருக்கிறான். இதை முல்லா முஹம்மது பாக்கிர் என்பவன் எழுதிய பிஹாருல் அன்வார் என்ற நூலில் இடம் பெறும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் அலீயை நோக்கி, அலீயே! எனக்குக் கிடைக்காததெல்லாம் உனக்குக் கிடைத்திருக்கிறது. ஃபாத்திமா உன் மனைவி! ஃபாத்திமாவைப் போன்று எனக்கு மனைவி இல்லை. உனக்கு ஃபாத்திமா மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்விருவர் போல் எனக்குப் பிள்ளைகள் இல்லை. கதீஜா உன் மனைவியின் தாயார். எனக்கு அவரைப் போன்று அன்பான மாமியார் இல்லை. நான் உனது அன்பாளன். உன் போன்ற அன்பாளன் எனக்கு இல்லை. உறவு முறையில் ஜஃபர் உன் சகோதரர். ஜஃபர் போன்ற சகோதரர் எனக்கு இல்லை. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் ஹாஷிமி கிளையைச் சார்ந்தவருமான ஃபாத்திமா உனது தாயார். (அலீயின் தாயார் பெயர் ஃபாத்திமா) அவர் போன்ற தாயாரை நான் அடைவது எப்போது? என்று கூறினார்கள்.
நூல்: பிஹாருல் அன்வார், பக்கம்: 129
பொய்யன் முஹம்மது பாக்கிர் அளக்கும் இந்தச் சம்பவம் தெரிவிப்பது என்ன?
நபி (ஸல்) அவர்களை விட அலீ பன்மடங்கு உயர்ந்தவர்; பல்வேறு கிடைப்பதற்கரிய பாக்கியங்களைப் பெற்றவர் என்று சித்தரித்து நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகின்றான். அவர்களது தரத்தை அலீயின் தரத்திற்குக் கீழே தாழ்த்தியிருக்கிறான். எனவே ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விட ஷியா இமாம்கள் உயர்ந்தவர்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்திருப்பது வெறும் வேஷம் தான்.
முஃபீத் என்ற ஷியாக்களின் தலைவன் தெரிவிக்கின்றான்.
(ஹுதைபாவே!) என்னிடம் குறுக்கிட்ட மனிதரை நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் ஒரு வானவர். இந்த நேரத்திற்கு முன்னர் பூமியில் அவர் இறங்கியதே கிடையாது. அலீக்கு ஸலாம் சொல்ல வேண்டும் என்று கண்ணியமிக்க அல்லாஹ்விடம் அவர் அனுமதி கேட்டார். அல்லாஹ் அவருக்கு அனுமதி கொடுத்ததும் அலீக்கு வந்து ஸலாம் சொன்னார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா
நூல்: முஃபீத் எழுதிய அல் ஆமாலி
இந்த மலக்கு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்ல வருகிறார் என்றால் அது நபி (ஸல்) அவர்களுக்குரிய மரியாதை எனலாம். ஆனால் அவர் அலீக்கு ஸலாம் சொல்ல வருகின்றார். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து ஹுதைபாவிடம் தெரிவிக்கின்றார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்த பதவியில் இருப்பது போலவும், நபியவர்கள் அலீக்கு தனிச் செயலாளர் போலவும் இவன் சித்தரிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்களை இந்த முஃபீத் என்ற ஷியா ஷைத்தான் எந்தத் தரத்தில் கொண்டு நிறுத்துகிறான் என்று பாருங்கள். எந்தத் தகுதியை அவர்களுக்குக் கொடுக்கிறான் என்று பாருங்கள்.
ஷியா என்பது பொய் என்ற புற்று நோயைப் பின்னணியாகக் கொண்டது. அந்தப் புற்று நோய் எப்படிப் பன்மடங்காக விரிந்து வேகமாகப் பரவுகின்றது என்று பார்ப்போம்.
தமது தோழர்களின் கூட்டத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அலீ (ரலி) வந்த போது, ஆதமின் படைப்பையும், நூஹின் ஞானத்தையும், இப்ராஹீமின் சகிப்புத் தன்மையையும் காண விரும்புவோர் அலீயைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு தன் தந்தை வழியாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். இதை முஃபீத், தனது ஆமாலி நூலில் 132ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றான். ஷியா ஷைத்தான்களுக்கு அலீயைப் புகழ்ந்து அழகு பார்க்க வேண்டும். அந்தப் புகழை நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.
தன்னை விட அலீ தான் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களே சொல்வது போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

அலீக்கு வந்த வஹீ?

மலக்குகள் மற்றும் இறைத் தூதர்களை அவமதிப்பது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய ஒரு கொடிய உணர்வு. அந்த உணர்வைத் தங்கள் இரத்தமாகக் கொண்டவர்கள் தாம் ஷியாக்கள். அதனால் தான் அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம்.
அது போல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கிறார்கள்; மட்டம் தட்டுகிறார்கள். அலீயை உயர்த்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாழ்த்துகிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெறும் ஒரு செய்தியைப் பாருங்கள்.
கைபர் வெற்றியை அறிவிக்கையில் அபூராஃபி கூறியதாவது: (கைபரை நோக்கி) அலீ சென்றார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். காலையில் அவர் வெற்றியடைந்து மக்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நின்றார். தன்னுடைய இறைவனுடன் அலீ ரகசியமாக உரையாடுகின்றார் என மக்கள் பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் அவ்வாறு நின்றதும் வெற்றி கொண்ட நகரத்தின் பொருட்களை எடுக்கும்படி உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் உத்தரவிட்டபடியே அலீ மக்களிடம் நின்றார். அல்லாஹ், அலீயிடத்தில் ரகசியமாக உரையாடுகின்றான் என்று மக்களில் ஒரு சிலர் பேசிக் கொண்டனர் என்று சொன்னேன். ஆம்! அபூராஃபியே! தாயிப் நாளின் போதும், தபூக்கின் கணவாய் நாளின் போதும் ஹுனைன் நாளின் போதும் அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடினான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்: பஸாயிருத் தரஜாத்
ஷியா இமாம்களால் அறிவிக்கப்படும் செய்தி இது!
இத்துடன் மற்றொரு செய்தியையும் இங்கு பார்ப்போம்.
என்னைப் போன்ற ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவரை வைத்து அல்லாஹ், கைபரை வெற்றி கொள்ளச் செய்வான். சாட்டை தான் அவருடைய வாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் மக்களிடம் தெரிவித்ததும் மக்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயை அழைத்து, நீ தாயிஃபுக்குச் செல் என்று கட்டளையிட்டார்கள். அலீ புறப்பட்டுச் சென்ற பின்னர், நீங்களும் தாயிஃபுக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபுக்குச் சென்ற போது அலீ (ரலி) மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒரு பேரிறைச்சல் சப்தத்தைச் செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று வினவப்பட்டது. அல்லாஹ் அலீயுடன் ரகசியமாக உரையாடுகின்றான் என்று பதிலளித்தார்கள்.
இவ்வாறு அபூஅப்தில்லாஹ் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.
நூல்: பஸாயிருத் தரஜாத்
இவ்விரு செய்திகளில் இருபெரும் அற்புதங்களை (?) இந்த யூத வாரிசுகள் அவிழ்த்து விடுகின்றனர்.
1. நபி (ஸல்) அவர்கள் அலீயை தாயிஃபுக்கு அனுப்பி வைத்ததால், அவரைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.
2. அல்லாஹ்வின் தூதரைப் போலவே அலீக்கு வஹீ வருகின்றது. அதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வரும் போது எழாத பேரிறைச்சல், வெடிச் சப்தங்கள், இடி முழக்கங்கள் எல்லாம் அலீக்கு வஹீ வரும் போது ஏற்படுகின்றன என்ற பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார்கள்.
அதையும் நபி (ஸல்) அவர்களே சொன்னார்கள் என்பது போல் சித்தரித்து, நபி (ஸல்) அவர்களை இரண்டாம் தரத்தில் நிறுத்துகின்றார்கள் இந்த ஷியா பாவிகள்.
முஹம்மத் (ஸல்) அவர்களே முதன்மையானவர்
எள்ளளவு, எள் முனையளவு ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட (இப்ராஹீம் நபி தவிர) மனித ஜின் இனத்தில் மேலானவர், அல்லது அவர்களுக்கு நிகரானவர் இருக்கின்றார் என்று ஒரு போதும் நம்ப மாட்டார். இந்த ஷியாக்களோ அலீயை நபிக்கு இணையானவர் என்ற வட்டத்தைத் தாண்டி மேலானவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது திருக்குர்ஆனுக்கு நேர் எதிரான கருத்தாகும்.
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அல்குர்ஆன் 33:6
இப்படியோர் உயர் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இரண்டாம் தகுதியைக் கொடுப்பவர்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

அகிலத் தூதர்
(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். அல்குர்ஆன் 34:28
(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன். அல்குர்ஆன் 25:1

 

அகிலத்தின் அருட்கொடை

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். அல்குர்ஆன் 21:107
இவையெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனித குலத்திலேயே சிறந்தவர்கள் என்பதற்குரிய அல்குர்ஆனின் அழகிய சான்றுகளாகும்.

 

மனித குலத் தலைவர்

நான் மறுமை நால் மக்கன் தலைவன் ஆவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3340)
முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத் தலைவர் என்பதை விளக்குவதுடன், அவர்கள் ஏனைய நபிமார்களை விடவும் சிறந்தவர் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இம்மாபெரும் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களைத் தான் இந்த ஷியாக்கள் அலீயை விடத் தாழ்த்தி மட்டம் தட்டுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் உயர்த்துபவன் ஒரு முஃமினாக இருக்க முடியாது. ஷியாக்கள் இன்னோர் அக்கிரமத்தையும் இங்கு நிலைநாட்டுகின்றனர். அது, அலீக்கும் வஹீ வருகின்றது என்று அவர்கள் குறிப்பிடுவதாகும்.
இந்த நம்பிக்கை கொண்டவன் ஒருபோதும் முஃமினாக, இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது. ஏனெனில் இது குர்ஆன், ஹதீசுக்கு நேர் எதிரான சிந்தனையும் கருத்துமாகும்.
4:163, 12:3, 13:30, 16:123, 17:73, 17:86, 35:31, 42:7, 42:13, 42:53 இன்னும் இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பற்றிக் கூறுகின்றன.

வஹீயில் பங்காளி இல்லை

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார். அல்குர்ஆன் 2:97
ஜிப்ரயீல் (அலை) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்தத் திருக்குர்ஆனை இறக்கியதாக இந்த வசனம் கூறுகின்றது.
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 33:40
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி என்று திருக்குர்ஆன் அறுதியிட்டுக் கூறுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீயில் எந்தப் பங்காளியும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றது.

 

இறுதித் தூதர்

தாம் இறைத் தூதர், தம்மைத் தவிர வேறு யாருக்கும் தூதுச் செய்தியில் பங்கும் இல்லை, பாகமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகின்றார்கள்.
பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத் தூதர்கள் இருந்தனர். இறைத் தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத் தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத் தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3455

 

கடைசிக் கல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்கல் இறுதியானவன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3535
தம்மைக் கடைசியாக வைக்கப்பட்ட செங்கலுக்கு உவமையாக்கி, தமக்குப் பிறகு நபி வரப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ்கள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ வஹீ வருகின்றது என்று நம்புபவன் இறை மறுப்பாளன் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

 

அலீயிடம் ஜிப்ரீல் வருவாரா?

அலீக்கு வஹீ வர வேண்டுமாயின் அது ஜிப்ரீல் வழியாகத் தான் வர வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வருகையளித்து வஹீ அறிவிக்கும் ஜிப்ரீல் அலீக்கு வருவாரா? ஒரு போதும் வர மாட்டார்.
திருக்குர்ஆன் 53வது அத்தியாயத்தில் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீலைச் சந்தித்த அந்தச் சந்திப்பை மாபெரும் ஓர் அற்புதம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த ஜிப்ரயீல், அலீயிடம் வருகின்றார்; வஹீ அறிவிக்கின்றார் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இந்த நாசகர்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை. இவர்களது இமாம்களுக்கே ஜிப்ரயீல், மீகாயீல் போன்ற மலக்குகள் வருகையளிக்கின்றார்கள் என்று இவர்கள் சொல்வதைக் கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். எனவே அலீயிடம் ஜிப்ரயீல் வருகின்றார் என்று இவர்கள் சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அதிலும் அல்லாஹ் அலீயிடம் உரையாடுகின்றான் என்று சொல்வது இறை மறுப்பின் உச்சக்கட்டமாகும்.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். அல்குர்ஆன் 42:51
அல்லாஹ் கூறுகின்ற இந்த மூன்று வரையறைகளைத் தாண்டி அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடுகின்றான் என்று சொல்கின்றனர். இதற்கு அரபியில், யுனாஜீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். ஒருவர் மற்றொருவருடன் ரகசியம் பேசும் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.
அலீயுடன் அல்லாஹ் ரகசியம் பேசுகின்றான் என்று இவர்கள் கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறும் வரையறையை அவனே மீறி விட்டான் என்று அல்லாஹ்வின் மீதே ஓர் அபாண்டத்தைச் சொல்கின்றனர். அத்துடன், இந்த உயர் தகுதியை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்காமல் அலீக்கு மட்டும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்றும் சொல்ல வருகின்றார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் மேற்கண்ட மூன்று வரையறையுடன் தான் பேசியிருக்கின்றான். இது தான் உண்மை! இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர்.
இந்த அடிப்படையில் ஷியாக்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.
ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
தொடரும்...
நன்றி: ஆன்லைன் பீ.ஜெ

வியாழன், ஜூன் 28, 2012

ஷியாக்கள் ஓர் ஆய்வு (பாகம் 13)


ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 13

ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

 

ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்!

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நான் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நான் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ, அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார் என்றோ அல்லது, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ சொல்லி விட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ, அலீ அவர்கள்! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்கடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியத்தான். அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல்: புகாரி 2975
அப்போரில் அலீ (ரலி) அவர்கள் யூதர்களின் மன்னன் மர்ஹப் என்பவனைக் கொலை செய்து வீழ்த்தி விடுகிறார்கள். (முஸ்லிம் 3696)
இது தான் கைபர் போரில் நடந்த உண்மை நிகழ்வு! ஆனால் இந்த நிகழ்வுக்கு ஷியாக்கள் எப்படி தெய்வீகச் சாயம் பூசுகின்றார்கள் என்று பாருங்கள்!
கைபர் போர் அலீ (ரலி) கையினால் வெற்றி கண்டது. அப்போரில் அவர் யூதர்களின் மன்னன் மர்ஹபைக் கொன்றதும் நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நற்செய்தி தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் வினவிய போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அளித்த பதில் இதோ:
அல்லாஹ்வின் தூதரே! மர்ஹபாவைக் கொல்வதற்கு அலீ (ரலி) வாளை உயர்த்திய மாத்திரத்திலேயே அலீயின் கையை அந்தரத்தில் பிடித்து வைக்கும்படி இஸ்ராபீல், மீகாயீல் ஆகிய இரு மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிட்டு விட்டான். ஏனெனில் அவர் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வாளை வீசினால் பூமியின் அடுக்குகளுக்குள் பாய்ந்து பூமி தலைகீழாகப் புரண்டு விடும். அதனால் தான் அவ்விரு மலக்குகளுக்கும் இப்படி உத்தரவிட்டு விட்டான்.
அத்துடன், ஜிப்ரயீலே! பூமியின் அதள பாதாளத்திற்கு விரைக! வாளின் வீச்சு பூமியின் பாதாளத்தில் பாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்துக! என்று அல்லாஹ் எனக்கும் ஓர் உத்தரவு போட்டான். உடனே நான் வந்து அலீயின் வாளைத் தடுத்து நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.
நான் ஏற்கனவே இதற்கு முன்பு லூத் நபியின் சமுதாயம் வாழ்ந்த மதாயின் நகரங்களை என் இறக்கைகளில் ஒன்றால் தூக்கி வைத்திருந்தேன். அவை ஏழு நகரங்கள். அந்நகரங்களில் உள்ள கோட்டைகளின் அடித்தளங்கள் ஏழாவது பூமி வரை பிடிமானம் கொண்டிருந்தன. அவற்றை ஸஹர் நேரம் வரை தாங்கிப் பிடித்திருந்தேன். அல்லாஹ் உத்தரவிட்டதும் அந்நகரங்களை தலைகீழாகப் புரட்டினேன். ஆனால் அவை எனக்கு அறவே பாரமாகத் தெரியவே இல்லை. அலீயின் வாளோ எனக்கு மிகவும் பாரமாக இருந்தது.
இது தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் தெரிவித்த விளக்கத்தின் சாராம்சமாகும்.
இவ்வாறு புர்ஸீ அறிவிப்பதாக ஜஸாயிதி கூறுகின்றார்.
நூல்: அல் அன்வாருன் நுஃமானியா
ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முகத்தில் காயத் தழும்பு இருந்தது. (ஸஃபிய்யா அவர்களை இந்தப் போருக்குப் பின்னர் தான் நபியவர்கள் திருமணம் முடித்தார்கள்) அதை நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது ஸஃபிய்யா (ரலி) தெரிவித்ததாவது:
கைபர் கோட்டையை அலீ கைப்பற்ற வந்த போது அது அவருக்கு மிகச் சிரமமானது. அதனால் அவர் கோட்டையை ஓர் உலுக்கு உலுக்கினார். கோட்டை மேல் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். கட்டில் மீது அமர்ந்திருந்த நான் அவர்கள் மீது விழுந்தேன். அப்போது கட்டில் என் மீது விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டு விட்டது.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்:
ஸஃபிய்யாவே! அலீ கோபப்பட்டு கோட்டையை உலுக்கியதும், அலீயின் கோபத்தைக் கண்டு அல்லாஹ்வும் கோபப்பட்டு வானங்களை ஓர் உலுக்கு உலுக்கினான். வானங்கள் அனைத்தும் குலுங்கின. மலக்குகள் பயந்து முகங்குப்புற விழுந்து விட்டனர்.
அலீயின் தெய்வீகத் துணிச்சலுக்கு இந்தச் சம்பவம் போதுமானது.
இரவு நேரத்தில் கைபர் கோட்டையின் கதவை அடைப்பதற்கு மட்டும் நாற்பது பேர் தேவைப்பட்டனர். அலீ கோட்டைக்குள் நுழைந்த போது அதிகத் தாக்குதல் காரணமாக கேடயம் அவரது கையிலிருந்து பறந்து விட்டது. உடனே கோட்டையின் கதவை அவர் கழற்றி விட்டார். அது அவருடைய கையில் கேடயமாகத் திகழ்ந்தது. கடைசியில் அல்லாஹ் கைபர் கோட்டையை அலீ வெற்றி கொள்ளச் செய்தான்.
நூல்: அல் அன்வாருன் நுஃமானியா
புர்ஸீ என்ற இந்தப் புறம்போக்கு, ஜிப்ரயீல் மீகாயீலை எப்படி மட்டம் தட்டி, அலீயை உயர்த்துகின்றார் என்று பாருங்கள்.
(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். அல்குர்ஆன் 81:20
ஜிப்ரயீலின் வலிமையை அல்லாஹ் சிலாகித்து, சிறப்பித்துச் சொல்கிறான். இந்த ஷியா ஷைத்தான்கள் ஜிப்ரயீலை விட அலீ வலிமையானவர் என்று குறிப்பிடுகின்றனர்.
ஒரு வாள் என்பது இரண்டு அல்லது மூன்று அடி நீளமிருக்கும். இந்த வாள் பூமியில் புகுந்து அதள பாதாளத்தைப் புரட்டி விடுமாம். புரூஸி சொல்கின்ற இந்தப் போலிக் கதையில் புராணங்கள் தோற்று விடும்.
இந்த மூன்றடி வாள் ஜிப்ரயீலின் இறக்கையில் பாரமாக இருக்கின்றது.
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 35:1
மலக்குகளின் இறக்கைகளைப் பற்றி அல்லாஹ் பெருமையாகச் சொல்கின்றான் என்றால் அந்த இறக்கைகளுக்கு ஒரு பிரம்மாண்டம் இருப்பதால் தான்.
இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸிலும் பார்க்கலாம்.
நான் ஆயிஷா (ரலி) அவர்கடம், அப்படி (நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) என்றால், பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது என்னும் (53:8,9) இறை வசனம் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது (குர்ஆனில் அவர் நெருங்கி அருகே வந்தார் என்பதில் அவர் என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களுடைய உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால் தான் அவர் அடிவானத்தையே அடைத்துக் கொண்டார் என்று பதிலத்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக் நூல்: புகாரி 3235
அடிவானத்தை அடைத்து நிற்கின்ற, அகன்ற, அற்புத இறக்கைகளுக்கு அலீயின் வாள் கனக்கிறதாம். ஜிப்ரயீலுக்கு அது வலிக்கிறதாம். பொய்யன் புரூஸி எப்படிக் காதில் பூச்சுற்றுகின்றார் என்று பாருங்கள்.
மனிதனால் ஒரு பேரீச்ச மரத்தைக் கூட தன்னந்தனியாகக் கழற்ற முடியாது. இது தான் உண்மை! யதார்த்தம்! ஆனால் இந்த ஷியாக்களோ, கோட்டையையே அலீ உலுக்கினாராம். அதனால் கோட்டை குலுங்கியதாம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வும் வானத்தை உலுக்கினானாம். எப்படி நா கூசாமல் புளுகித் தள்ளுகிறார்கள் என்று பாருங்கள்.
இவ்விரு பொய் சம்பவங்களின் மூலம் புருஸீ நிலை நிறுத்த முயல்வது, அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வத் தன்மை, தெய்வீக சக்தி இருக்கின்றது என்பதைத் தான்.
இந்து மதப் புராணங்களில் வரும் தெய்வீகக் கோட்பாட்டை, மனிதனைக் கடவுளாக்கும் கோட்பாட்டை அலீயின் மீது திணித்து அவரைக் கடவுளாக்குகின்றனர்.
இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அல்குர்ஆன் 9:30)
தொடரும்...
நன்றி: ஆன்லைன் பீ.ஜெ

செவ்வாய், ஜூன் 26, 2012

ஷியாக்கள் ஓர் ஆய்வு (பாகம் 12)


ஷியாக்கள் ஓர் ஆய்வு - 12

நபிமார்களை இழிவுபடுத்துதல்

அபூஉஸாமா

அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம். 
அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.
அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.
நூல்: பஸாயிருத் தரஜாத்
ஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.

 

இறைக் கோபமும் சிறை வாசமும்

அல்லாஹ், தனது தூதர் யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்?
அதைத் திருக்குர்ஆனிலிருந்து பார்ப்போம்.
எல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது. இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர். அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.
ஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம் யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிச் சொல்கிறான்.
(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம். அல்குர்ஆன் 10:98
தமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார்கள்.
அதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச் சென்று கப்பலில் பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.
யூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம். அல்குர்ஆன் 37:139-148
தன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். அல்குர்ஆன் 21:87. 88
யூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை மறுப்பில்லையா?
இது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட  அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் செல்கிறது ஷியாயிஸம்.

தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?

அலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன் இவர்கள் நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.
யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:
நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.
கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:
"வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.
நூல்: அல்காஃபி ஃபில் உசூல்
பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்
"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
யூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர் ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.
இங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ் நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்கள்.
யூனுஸ் நபி அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப் போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அல்குர்ஆன் 68:48
அல்லாஹ்வின் மீது கோபம் கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை! இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த முன்னெச்சரிக்கையை விடுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376
இறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா விஷக் கிருமிகள், தங்கள் பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.
 ஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப் போகின்றது.
இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த அருட்கொடை விளங்கும்? இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப் புறந்தள்ளி விட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும் அலீயை உயர்த்துகின்றார்கள்.
அதை இப்போது பார்ப்போம்.
தொடரும்...
நன்றி: ஆன்லைன் பீ.ஜெ