நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

மகளிருக்கான திரை: மார்க்கமா? மரபா?

மகளிருக்கான திரை: மார்க்கமா? மரபா?
SLTJ
இன்று பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை விட்டும் பெண்களை பிரிக்கும் விதமாக திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதனை இப்போது நாம் பார்க்க முயல்வோம்.
முஃமின்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடவேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் நம்முடைய மனோஇச்சைகளைப் புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுவதே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையாகும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33 : 36)
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம். கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24 : 52)
 மேற்கண்ட இறைக்கட்டளைகளை நம்முடைய மனதில் பதிய வைத்துக் கொண்டு மேற்கண்ட கருத்து வேறுபாட்டிற்கான மார்க்கத்தீர்ப்பைக் காண்போம்.
நாம் நம்முடைய முன்மாதிரியாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு பயான் செய்யும் போதும் தொழுகையிலும் கண்டிப்பாக
 திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும்.
ஆனால், பெண்களுக்கு உரையாற்றும் போதும், தொழுகையின் போதும் திரையிடவேண்டும் என்று நபியவர்கள் கட்டளைபிறப்பிக்கவில்லை. இன்னும் தம்முடைய வாழ்நாளில் செய்து காட்டவுமில்லை. இதற்கு மாற்றமாக நபியவர்கள் திரையின்றியே பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். தொழுகை நடத்தியுள்ளார்கள். இதனை பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஹதீஸ் : 1   
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முதலில் நடத்திவிட்டுத் தான் உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க பெண்கள் (தத்தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர்.(நூல் : புகாரி 978)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வரியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மர்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, ‘தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ‘அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள் (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையில் போட்டனர். (நூல் : முஸ்லிம் 1607)
நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று எவ்விதத் திரையுமில்லாமல் பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். நபியவர்களுடன் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்துள்ளார்கள். மேலும், கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து கேள்வி கேட்டார் என்று வந்துள்ளது. திரையிட்டிருந்தால் இவ்வாறு கூறுவதற்கு இயலாது. மேலும்யூயூ பெண்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏந்திய துணியிலே தர்மங்களைப் போட்டுள்ளார்கள். திரையில்லாமல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். எனவே, பெண்களுக்கு உரை நிகழ்த்தும் போது திரையில்லாமல் உரை நிகழ்த்தலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.
ஹதீஸ் : 2   
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்” என்று கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்யூயூ ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்றுகூடுங்கள்” என்று சொன்னார்கள்.
அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்களிடம் சென்றுயூயூ அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகுயூயூ ‘உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாகயூயூ தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?” என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ‘ஆம், இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 7310)
நபியவர்கள் பெண்களுக்கு என்று பிரத்யோகமாக நாள் நேரத்தை நிர்ணயித்து உரையாற்றியுள்ளார்கள். பெண்களும் நபியவர்களிடம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்டுள்ளார்கள் . இதிலிருந்தே அங்கு எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபியவர்கள் காலத்தில் ஐந்து வேளையும் பெண்கள் பள்ளி வந்து ஜமாஅத்துடன் தொழுபவர்களாக இருந்துள்ளனர். ஆனால், நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எத்தகைய தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரை ஏற்படுத்த வேண்டுமானால் தொழுகையில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தும் திரை அவசியமில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதற்கான சான்றுகளைக் காண்போம்.
ஹதீஸ் : 3   
சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம்யூயூ ‘ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்” என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 362)
பெண்களின் பார்வை ஆண்களின் மறைவிடங்களைப் பார்த்துவிடக் கூடாது என்ற காரணத்தினால்தான் நபியவர்கள் பெண்களை தாமதமாக சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துமாறு கூறுகிறார்கள். இதிலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஹதீஸ் : 4   
அம்ர் பின் சலிமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்@ உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள்.
நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (நூல் : புகாரி 4302)
இமாமின் ஆடை கிழிந்திருந்தை ஒரு பெண்மணி சுட்டிக்காட்டுகிறார் என்றால் அங்கு எவ்விதத் திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். திரை இருந்திருந்தால் இமாமின் ஆடை கிழிந்திருந்ததை அப்பெண்மனி பார்த்திருக்க முடியாது.
ஹதீஸ் : 5   
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 749)
ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழும் போது ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்பார்கள். இறுதி வரிசையில் நிற்கின்ற ஆண்களின் பார்வை தமக்குப் பின்னால் நிற்கின்ற பெண்களின் மீது படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகத்தான் நபியவர்கள் ஆண்கள் வரிசையில் மிக மோசமானது இறுதி வரிசை என்று கூறுகிறார்கள். அல்லது முதல் வரிசையில் நிற்கின்ற பெண்கள் தமக்கு முன்னால் நிற்கின்ற ஆண்களின் மீது பார்வை செலுத்தும் நிலை ஏற்படலாம். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் பெண்களின் வரிசையில் கெட்டது முதல் வரிசை என்று கூறுகிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் இவ்வாறு நபியவர்கள் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும்யூயூ நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறவுமில்லை. அவரவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அறிவுரைதான் கூறுகின்றார்கள்.
ஹதீஸ் : 6   
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (தொழுகையில்) கலந்துகொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறியமாட்டார்கள். (நூல் : புகாரி 372)
  ஹதீஸ் : 7   
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களை அழைத்து, ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, ‘பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர் (நூல் : புகாரி 864)
பள்ளிவாசலில் பெண்கள் தூங்கிவிட்டார்கள் என்பதை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிக்கு கூறுகின்றார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் நிச்சயமாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.
ஹதீஸ் : 8   
உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற் காகத்தான்” என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.(நூல் : புகாரி 870)
மேற்கண்ட ஹதீஸ_ம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்விதத் தடுப்பும் இருந்திருக்கவில்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
ஹதீஸ் : 9   
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு நாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் அவர்கள் எங்களுக் குப் பின்னால் நின்றார்கள். (நூல் : புகாரி 871)
உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுள்ளார்கள். ஆனால், நபியவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை.
மேலும், தொழுகையில் இமாம் தவறு செய்து விட்டால் அதை உணர்த்தும் கடமை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கும் இருக்கின்றது. திரையிட்டு விட்டால் அது ஒரு போதும் சாத்தியமாகாது.
மேலும், பொதுவாக வீதிகளில் நடந்து செல்லும் போதும்,காய்கறிக் கடைகளிலும் இன்னும் பல்வேறு நிலைகளிலும் ஆண்கள் பெண்கள் ஒன்று கூடுகின்ற நிலைகள் சமுதாயத்தில் இருக்கின்றது. பெண்கள் பயான் மற்றும் தொழுகையைத் தவிர வேறு எங்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிட்டுக் கொள்வது கிடையாது.
பெண்கள் பயானில் திரையிடுவது அவசியம் என்றால் மற்ற இடங்களில் திரையிடுவது அதை விட மிகவும் அவசியமானதாகும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், சந்தைகள், பலசரக்குக் கடைகள்யூயூ கடற்கரைகள் போன்ற அனேக இடங்களில் திரையின்றி தான் பெண்கள் நடமாடுகின்றனர். பித்னா உருவாகும் என்றிருந்தால் இது போன்ற இடங்கள் தான் இதற்கு மிகவும் ஏற்ற இடங்கள். ஆனால், அங்கு யாரும் இதைக் கண்டு கொள்வது கிடையாது.
வீட்டுக்கு வரும் மீன் வியாபாரியிடம் குழைந்து இனிக்க இனிக்க பேசுவதற்கு அனமதியளித்துவிட்டு, மார்க்கம் கற்பதற்காய் பெண்கள் வெளிக்கிளம்பும் போது மாத்திரம் ‘ஆண்கள் எப்படி பெண்களை திரையின்றி பார்க்கலாம்? திரையின்றி எப்படி பயான் கேட்கலாம்?’ என்று வினா தொடுப்பது விசித்திரமாய் உள்ளது. இதை நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழுகையில் திரையிட வேண்டும் என்று வலிறுத்துபவர்கள் மற்ற இடங்களில் அதை சாதரணமாக எடுத்துக் கொள்வது ஏன்? என்கின்ற முரண்பாட்டை விளக்குவதற்காகத்தான்.
முறையாகப் பெண்கள் பர்தா அணிந்து இருக்கும் போது அந்தச் சபையில் திரையின்றிப் பேசுவதால் எவ்விதக் குற்றமும் கிடையாது. அதே நேரத்தில் உரையாற்றுபவரைத் தவிர மற்றவர்கள் தேவையின்றி பெண்கள் சபைக்குச் செல்வதையும், பெண்களின் சபைகளை நோக்கி பார்வைகளைத் திருப்புவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திரையின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் இடைவெளியை அதிகரிப்பதில் தவறில்லை.
நபியவர்கள் பெண்களுக்கு உரையாற்றும் போதும் பள்ளியில் தொழுகை நடத்தும் போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித ஹிஜாபையும் ஏற்படுத்திக் கொள்வில்லை. நம்முடைய அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான். அவர்கள் இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்கும் போது அதற்கு மாற்றமாக திரையிடுவதை அவசியமாக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
source: http://www.sltj.lk/

பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட வேண்டுமா?

பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட வேண்டுமா?

RASMIN MISC

இன்றைய காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை?
இந்தக் கேள்வியைக் பொருத்த மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
திரை என்றால் என்ன?
ஆண் பிரச்சாரகா்கள் பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் அல்லது பெண்களுக்கான குா்ஆன் வகுப்புகள் நடத்தும் போது பிரச்சாரகா்களுக்கும் கேட்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு மறைப்பை ஏற்படுத்துவார்கள் இது திரை என்ற வாசகத்தினால் குறிப்பிடப் படுகிறது.
இப்படி திரை போட்டு இரண்டு தரப்பாரையும் பிரித்து வைப்பது மார்க்கத்தில் உள்ளது தான் என மக்கள் எண்ணுகிறார்கள்.
பிரச்சாரத்திற்கு மட்டும் தான் திரையா?
பெண்கள் பயான் நிகழ்சிகள் அல்லது குா்ஆன் விளக்க வகுப்புகள் நடத்துகின்ற நேரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்தத் திரை போடும் முறையை கையால்கிறார்கள்.இப்படி திரை போடும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் பெண்களை ஆண்கள் பார்த்துவிடக் கூடாது அதனால் தான் இப்படி நாங்கள் செய்கிறோம்.
அப்படி பார்க்கிற நேரங்களில் மார்க்கத்திற்கு முரனான காரியங்கள் நடப்பதற்கு வாய்பாக இருக்கிறது.என்று கூறிவிடுகிறார்கள்.
இப்படி மார்க்கப் பிரச்சாரத்திற்கு காரணம் சொல்லக் கூடியவர்கள் இதே காரணத்தை மற்ற இடங்களில் நடை முறைப்படுத்துவதில்லை.
கடைத்தெருவில் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.
கல்லூரிகளில் படிக்கும் சகோதரிகளுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.
பஸ்ஸில் பிரயாணிக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சொல்வதில்லை.
பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகள் விஷயத்தில் இந்த நடை முறையைக் கையால்வதில்லை.
பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கட்) களில் பொருள் வாங்கச் செல்லும் பெண்கள் விஷயத்தில் இந்தச் சட்டத்தை இவா்கள் பங்கு வைப்பதில்லை.
இப்படி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எதற்கும் சொல்லாத இந்த சட்டத்தை மார்க்க விஷயத்தில் மாத்திரம் ஏன் கடைப்பிடிக்கிறார்கள்.
கடைத்தெருவில் திரை இல்லை. தவறு நடக்காதா?
கல்லூரிகளில் திரை இல்லை தவறு நடக்காதா?
பஸ்களில் திரை இல்லை தப்பு ஏற்படாதா?
பகுதி நேர வகுப்புகளில் குற்றம் நடக்காதா?
குற்றத்தைப் பொருத்தவரையில் இறையச்சம் இல்லாவிடில் எந்த இடத்திலும் தவறுகள் நடக்கலாம்.
அதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை பேணுதல் என்ற அடிப்படையில் நாம் நடைமுறைப் படுத்தக் கூடாது.
நபியவா்கள் திரையைப் பயன் படுத்தினார்களா?
நபியவா்களின் காலத்தில் நபி(ஸல்)அவா்கள் பெண்களுக்கு மத்தியில் மார்கப் பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள்.அப்படி பிரச்சாரம் செய்கின்ற நேரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பிரித்து திரை ஏதும்  பயண்படுத்தவில்லை.
தற்காலத்தில் யார் அப்படி திரை போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்துகிறார்களோ அவர்கள் இதற்குறிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்‘ அல்லது ‘நோன்புப் பெருநாள்‘ தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று”பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். ”நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்  மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள் ”மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். ”பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க அப்பெண்கள் ”ஆம் (பாதியளவுதான்)”என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:”என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை  நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்க மீண்டும் அப்பெண்கள் ”ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.(புகாரி 304)
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.ஆனால் அங்கு திரை போட்டு பேசவில்லை.
பொதுவாகவே பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது இந்த நடை முறையைத் தான் நாம் கையால வேண்டும் பேணுதல் என்று கூறிக் கொண்டு நபியவர்கள் காட்டித் தராத காரியங்களை நாமாக மார்க்கம் என்று புகுத்துதல் கூடாது.
இதே நேரம் பள்ளியில் நுழையும் போது மற்றவர்களால் பெண்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படும் என்று நாம் கருதும் பட்சத்தில் ஓரங்களில் திரைகளை போட்டுக் கொள்வதில் எந்தத் தவரும் இல்லை.
ஆனால் உரை நிகழ்த்தும் இமாமுக்கும் அதனை கேற்பவர்களுக்கும் மத்தியில் திரை போட வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத ஒரு சட்டத்தை தினிப்பது குற்றமாகும்.
RASMIN MISC

திங்கள், நவம்பர் 11, 2013

மஹ்ஷரில் மனிதனின் நிலை

மஹ்ஷரில் மனிதனின் நிலை
எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 
மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன. 

அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக 
இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம். அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள்.  
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:6-8) 
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்'' என்று கூறியதை நான் கேட்டேன்.
 
நூல்: முஸ்லிம் (5518) 
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால், அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்'' என்று கூறியதை நான் கேட்டேன். 
நூல்: முஸ்லிம் (5519) 
கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள். மனிதர்களின் பொதுவான நிலை இந்த உலகத்தில் பிறக்கும் போது மனிதர்கள் எவ்வாறான நிலையில் இருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய நாளில் அனைவரும் இருப்பார்கள். ஆடை அணியாதவர்களாக, செருப்பு போடாதவர்களாக, விருத்தசேதனம் செய்யாதவர்களாக பரந்து விரிந்த நிலப்பரப்பில், பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருப்பார்கள். நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நூதனவாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த நிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள். இதற்குரிய ஆதாரங்களை இப்போது காண்போம். 
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். (அல்குர்ஆன் 21:104) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), "மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு "எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்'' எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, "அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாüல் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (5102) 
கெட்ட மனிதர்களின் நிலை பூமியில் வாழும் காலத்தில் நாமெல்லாம் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நல்ல காரியங்கள் செய்கிறோமா? தீய காரியங்கள் செய்கிறோமா? என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தமக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு தரும் காரியங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறர் நலம் மறந்து, மறுத்து சுயநலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் தவறான குணத்தாலும் காரியத்தாலும் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மக்கள், இவ்வுலகில் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, பாவங்களுக்குத் தோதுவாக மறுமையில் சில வகையான நிலைகளில் நிறுத்தப்படுவார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

இறைமறுப்பாளர்களின் நிலை  
இறைவன் கொடுத்த பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல் அவனை மறுத்துக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று, இறைவன் இருப்பதாக நம்பினாலும் அவனைச் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அவனுக்குரிய ஈடு இணையற்ற இடத்தில் மற்ற படைப்பினங்களை வைத்து அல்லது அவை இருக்கும் இழிவான நிலைக்கு இறைவனை தரம் தாழ்த்தி மகிழும் மக்கள் பலர் இருக்கிறார்கள். மறுமை நாளில் மஹ்ஷரில் இவர்களுக்கென்றே குறிப்பிட்ட சில வகையான நிலைகள் இருக்கின்றன. எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அந்த நாளில் இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறதோ? என்ற பீதியில் பதறியவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களது முகம் கவிழ்ந்த நிலையில் இறைவனிடம் இழுத்துச் செல்லப்படுவார்கள். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.  
அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள். (அல்குர்ஆன் 80:37-42)

 
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!'' என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்). (அல்குர்ஆன் 3:106, 107)  
சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது "மந்திரிப்பவன் யார்?'' எனக் கூறப்படும். "அதுவே பிரிவு'' என்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும். அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான். பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான். (அல்குர்ஆன் 75:22-33)  
முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழி கெட்டோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:34) 
ஒருமனிதர் "அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாüல் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "இந்த உலகில் அவனை இரு கால்கüனால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாüல் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?'' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (4760)

போதனையை புறக்கணித்தவர்களின் நிலை 
ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராகத் திகழ வேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம். தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான். 
அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், "நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?'' என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.
 (
அல்குர்ஆன் 17:97, 98) 

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். "என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான். "அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான். 
அல்குர்ஆன் (20:124-126)

கொலையாளிகளின் நிலை  
தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை. ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில் கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்துவரப்படுவார்கள். 
 (இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, "என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: திர்மிதீ (2955)  

நீதம் செலுத்தாதவர்களின் நிலை  
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள். மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள். இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா? 

"
எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: நஸாயீ (3881)  


வட்டிக்காரர்களின் நிலை வட்டி 
என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் தீமை தரக்கூடியதல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கைத் தரும் பெரும்பாவமே வட்டியாகும். வட்டியினால் பலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏராளமான தீமைகள், பிரச்சனைகள் உருவெடுக்கின்றன. இப்படிப்பட்ட வட்டியினால் மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை; எனக்கு உலக ஆதாயமே முக்கியம் என்று சுயநலத்தோடு பொதுநலத்தை மறந்து பல மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இழிவு என்ன தெரியுமா? பூமியில் வாழ்ந்த முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர்கள் வரை எல்லோரும் நிற்கும் மாபெரும் சபையில் பைத்தியமாக உளறிக் கொண்டிருப்பார்கள்; புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கேவலம் வேண்டுமா? என்பதை வட்டி வாங்குபவர்கள் யோசிக்க வேண்டும்.  
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் (2:275)  
யாசகம் கேட்பவர்களின் நிலை 
குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள். உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (1474, 1475) 

மோசடி செய்பவர்களின் நிலை 
இறையச்சம் இல்லாமல் பிறருக்குரிய பொருளாதாரத்தை, பொருட்களை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்கும் மோசடிக்காரர்கள் சமுதாய மக்களிடத்தில் இருந்து மறைந்து கொள்ளலாம்; தங்களது மோசடியை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை நாளில் இவ்வாறு தப்பிக்க இயலாது. இவர்களின் முகத்திரையை மற்றவர்களின் முன்னிலையில் வல்ல இறைவன் கிழித்தெறிவான். இத்தகைய மோசடி மன்னர்களுக்கு பல இழிவான நிலைகளைக் கொடுத்து கேவலப்படுத்துவான். மோசடிக்காரர்கள் தாங்கள் செய்த மோசடிப் பொருட்களைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இனம் காட்டும் விதமாக அவர்களுக்கு அசிங்கமான முறையில் கொடி ஒன்று குத்தப்பட்டிருக்கும். இவ்வாறான வெட்கக்கேடான நிலையில் வெட்டவெளி மைதானத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் உலாவந்து கொண்டிருப்பார்கள். இந்த அவலத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் மோசடி செய்வதற்குக் கடுகளவும் நெருங்க மாட்டார்கள் என்பதே உண்மை. 
மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
 (அல்குர்ஆன் 3:161) 


அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 
(
ஒரு முறை)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்'' என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது - "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அவர், "தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்'' என்றார்.  
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். 
நூல்: முஸ்லிம் (3743, 3266) 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாüல் (அவனுடைய மோசடியை வெüச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது "இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (6178, 6177) 
நபி (ஸல்) அவர்கள் எங்கüடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, "மறுமை நாüல் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாüல்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்üயும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்''என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3073) 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். 
அறிவிப்பவர்: சயீத் பின் ஸைத் (ரலி) நூல்: புகாரி (2452) 


ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை 
மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள். ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான். எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா? உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி) நூல்: புகாரி (1402) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"எனது உயிர் எவன் கையிலுள்ளதோ' அல்லது "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ' அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி (1403, 4659, 1403, 1460) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு, "அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், "அது தங்களுக்கு நல்லது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (1403), திர்மிதீ (2938) 
உங்களது கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (4659)

 "பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (1803)

நன்றி: ஏகத்துவம் ஆகஸ்ட் 2013